மாயா இயக்குனரின் அடுத்தப் படம்

Share this :
No comments


நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் மாயா. திகில் படமாக வெளியான இப்படம் அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்று வசூலிலும் சாதனை படத்தது.

இப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்கியிருந்தார். இவர் அடுத்ததாக மொமன்ட் என்டர்டெயின்மென்ட் சார்பாக ஜி.ஏ.ஹரி கிருஷ்ணன் தயாரிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கான நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

தயாரிப்பாளர் ஜி.ஏ.ஹரி கிருஷ்ணன், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட பல படங்களுக்கு தயாரிப்பு மேற்பார்வையாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் டபிள்யூ.டி.எப் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஜி.ஏ.ஹரி கிருஷ்ணன் இணைந்து தயாரித்த மோ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

No comments :

Post a Comment