வயாகரா மாத்திரை சாப்பிட்டா நல்லதாம்: யாருக்குனு தெரியுமா?
உடலுறவில் ஈடுபட இருப்பவர்களில் சிலர் அதில் ஆக்ரோஷமாக, சிறப்பாக செயல்பட வயாகரா மத்திரை எடுத்துக்கொள்வார்கள். வயாகரா என்றாலே அது ஆண்களின் செக்ஸ் உணர்வை தூண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
ஆனால் வயாகரா மத்திரையால் மாரடைப்பை தடுக்க முடியும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இது குறித்த ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வில் அவர்கள் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்க்கரை மற்றும் இதய நோயாளிகளுக்கு வயாகரா மாத்திரை கொடுத்து ஆய்வு நடத்தினர். இந்த ஆராய்ச்சியின் முடிவில் வயாகரா மாத்திரை எடுத்துக் கொண்டவர்களின் இதயம் சீராக இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.
வயாகராவில் உள்ள பி.டி.இ. 5-ஐ என்ற வேதிப்பொருள், என்சைம்களை தடுத்து மிக மெலிதான திசுக்களை விரிவடையாமல் தடுக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment