அஜித் பட வில்லன் - அர்ஜுன் முதல் அரவிந்த்சாமிவரை
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் இப்போதைய தலையாய பிரச்சனை வில்லன். நாயகியாக யாரை வேண்டுமானாலும் போடலாம்.
ஆனால் வில்லன்...? வில்லன் எத்தனை விறைப்பாக இருக்கிறாரோ அந்தளவுக்கு நாயகன் கதாபாத்திரம் சிறப்பு பெறும்.
அஜித் படத்துக்கு விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க திட்டமிருந்தது. விஜய் சேதுபதியின் பிஸி ஷெட்யூல்ட் காரணமாக அது யோசனையோடு கைவிடப்பட்டது. பிறகு அரவிந்த்சாமி முதல் அர்ஜுன்வரை பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. நடுவில் சசிகுமார் பெயர்கூட அடிபட்டது.
இந்நிலையில், அர்ஜுனின் பெயர் இறுதி செய்யப்படலாம் என்று தகவல். விரைவில் வில்லனை முடிவு செய்துவிட்டு படப்பிடிப்புக்கு கிளம்பயிருக்கிறார்கள்.
கடன் பிரச்சனையிலிருந்து விடுபட
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment