பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு - எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

Share this :
No comments


பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகளும், டீசல் விலை 1.24 ரூபாயும் உயர்த்தப்பட உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பெட்ரோல், டீசல் விலைகளை சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகிய நிலவரங்களுக்கு ஏற்ப நிர்ணயிக்கும் உரிமை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மாதந்தோறும் 1 மற்றும் 16 ஆம் தேதிகளில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5 காசும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 1.24-ம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

No comments :

Post a Comment