தனுஷால் தள்ளி வைக்கப்பட்ட ஜீ.வி.பிரகாஷ்
வெற்றிமாறன் படம் என்றால் இசை ஜீ.வி.பிரகாஷ் என்பது தமிழகம் அறிந்த விஷயம்.
வெற்றிமாறனின் முதல் படம் பொல்லாதவன் தொடங்கி கடைசியாக வெளியான விசாரணைவரை அனைத்துப் படங்களுக்கும் ஜீ.வி.பிரகாஷே இசையமைத்தார். ஆனால், வெற்றிமாறனின் புதிய படம் வடசென்னையில் அவர் கிடையாது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
பிரபல இதழ் நடத்திய யார் பிரபல நடிகர் போட்டியில் தனுஷை வெற்றியாளராக அவ்விதழ் அறிவித்தது. ஆனால், ரசிகர்கள் தேர்வு செய்தது விஜய்யை, ஆனால், விஜய் பேட்டி கிடைக்காததால் தனுஷை வெற்றியாளராக அறிவித்தனர் என்று சர்ச்சையை கிளப்பினார் ஜீ.வி.பிரகாஷ்.
இதன் காரணமாகவே வடசென்னையில் ஜீ.வி.பிரகாஷ் வேண்டாம் என்றிருக்கிறார் தனுஷ். வடசென்னையை தனுஷும், லைக்காவும் இணைந்து தயாரிப்பதால் வெற்றிமாறனும் வேறு வழியின்றி இதற்கு சம்மதித்துள்ளார்.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment