சுவையான சத்தான கேழ்வரகு - கம்பு கூழ் தயாரிக்கலாம் வாங்க ...!!

Share this :
No comments


கேழ்வரகு மாவு - கம்பு மாவு இரண்டையும் கலந்து செய்யும்போது நன்றாக இருக்கும். கேழ்வரகு மாவை புளிக்க வைத்துச் செய்யும்போது சுவை கூடுதலாக இருக்கும்.

அல்லது இரண்டு மாவையும் ஒன்றாகக் கலந்து உடனடியாகவும் தயாரித்துக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - 1/2 கப்
கம்பு மாவு - 1/2 கப்
உப்பு - தேவைக்கு

செய்முறை:

* முதல் நாளிரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் விட்டு கட்டிகளில்லாமல் தோசை மாவு பதத்தைவிட கொஞ்சம் நீர்க்க கரைத்து, புளிக்க வைக்கவும். காலையில் பார்த்தால் மாவு புளித்து, பொங்கினாற்போல் இருக்க வேண்டும். இட்லி மாவை புளிக்க வைப்பதுபோல் செய்ய வேண்டும். உப்பு போட வேண்டாம்.

* காலையில் ஒரு பாத்திரத்தில் நான்கைந்து கப்புகள் தண்ணீர் விட்டு சூடேற்றவும்.

* அது கொதி வருவதற்குள் கம்பு மாவில் தண்ணீர் விட்டு நீர்க்க கரைத்து வைக்கவும்.

* தண்ணீர் கொதி வந்ததும் கம்பு மாவை ஊற்றிக் கட்டிகளில்லாமல் கிண்டிவிடவும். அடியில் பிடிக்காமலும், கட்டி விழாமலும் தடுக்க அடிக்கடி கிண்டிவிட வேண்டும்.

* சிறிது நேரத்தில் கம்புமாவு பொங்கி வரும். அப்போது கேழ்வரகு மாவைக் கரைத்து ஊற்றவும். தேவையான உப்பு சேர்த்துக்கொள்ளவும். மீண்டும் கட்டிகள் வராதவாறு விடாமல் கிண்டவேண்டும்.

* ஒரு 5 நிமிடம் கழித்து தீயை மிதமாக்கி மூடி மேலும் ஒரு 5 நிமிடம் வைக்கவும். இப்போது இரண்டு மாவும் கலந்து கொதித்தபிறகு நல்ல வாசனை வரும். கெட்டியாகவும் இருக்கும்.

* விருப்பப்படி சூடாகவோ அல்லது ஆறியபிறகோ சாப்பிடலாம். குளிர் காலத்தில் சூடாகவும் கோடையில் ஆற வைத்தும் சாப்பிடலாம்.

* இதனை சாதம்போல் வைத்து எந்தக் குழம்புடனும் சாப்பிடலாம். அல்லது சிறிது தண்ணீர் அல்லது மோர் சேர்த்துக் கரைத்து துவையல் வகைகள், ஊறுகாய் வகைகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும். நல்ல சத்தானதும்கூட.

No comments :

Post a Comment