பிரதமர் மோடியின் புதிய விமானம் ரேடாரில் சிக்காது ; ஏவுகணையை முறியடிக்கும்!

Share this :
No comments


பிரதமர் மோடி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், உறவுகளை வலுப்படுத்தும் வகையில், அரசுமுறை பயணமாக பல நாடுகளுக்கு சென்று வருகிறார்.கடந்த 2 ஆண்டுகளில் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா என்று 40 நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்னும் 3 ஆண்டு காலத்தில் அவர் மேலும் பல உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். தற்போது மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக போயிங் 747 ரக விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த விமானத்தில் பல்வேறு வசதிகள் இருந்தாலும் கூட அமெரிக்க ஜனாதிபதிகள் பயன்படுத்தும் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் இருப்பது போன்ற பாதுகாப்பு வசதிகள் இல்லை. ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் 5 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பிரத்தியேகமாக கட்டப்பட்டது. பிரதமர் மோடிக்கும் தீவிரவா அச்சுறுத்தல் இருப்பதால், வான்வழி தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில், அவருக்கென்று 2,100 கோடி மதிப்பீட்டில் பிரத்தியேக விமானம் தயாரிக்கப்படவுள்ளது.

எனவே பிரதமர் மோடி தற்போது பயணம் செய்யும் போயிங் 747 ரக விமானத்துக்கு பதிலாக அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட போயிங் 777 - 300ரக விமானத்தை வாங்கி பயன்படுத்த ராணுவ அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த விமானத்துக்கு ஏர்இந்தியா ஒன் என்று பெயர் சூட்டப்படும்.

இந்த விமானத்தில் ஏவுகணை முறியடிப்பு வசதி , நவீன தகவல் தொடர்பு வசதிகள். ராக்கெட் தாக்குதலை தாங்கும் வலிமை கொண்டது. எதிரியின் ரேடார் வலையில் சிக்காது. எதிரியின் ரேடாரை செயல் இழக்க வைக்கும். ரேடார் கண்காணிப்பையும், ஏவுகணை நெருங்குவதையும் முன்கூட்டியே தெரிவித்து விடும். ஏவுகணை தாக்குதல் முறியடிப்பு வசதிகள், 2 ஆயிரம் பேருக்கான உணவை சேமித்து வைக்க முடியும்.

அவசர நிலையில், பறக்கும்போதே விமானத்துக்கு எரிபொருளை நிரப்ப இயலாம்., 24 மணி நேரமும் டாக்டர்கள் இருப்பார்கள்,அவசர நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய ஆபரேசன் தியேட்டர், பிராண்ட் பாண்ட், ரேடியோ, 19 டி.வி.க்கள் பொருத்தப்படவுள்ளது. பிரதமருக்கென்று தனியாக அலுவலகம், படுக்கையறை வசதியும் இந்த விமானத்தில் ஏற்படுத்தப்படவுள்ளது.


No comments :

Post a Comment