மகனுக்கு தம்பி பாப்பா பெற்றுக் கொடுத்த நடிகை ஜெனிலியா
மும்பை: இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நடிகை ஜெனிலியாவுக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நடிகை ஜெனிலியா பாலிவுட் பக்கம் சென்றபோது நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை சந்தித்து காதல் வயப்பட்டார். 2003ம் ஆண்டில் இருந்து காதலர்களாக வலம் வந்த அவர்கள் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
அவர்களுக்கு ரியான் என ஒன்றரை வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமான ஜெனிலியாவுக்கு மும்பை மருத்துவமனை ஒன்றில் இன்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ரியானுக்கு தம்பி பாப்பா பிறந்துள்ளது குறித்த மகிழ்ச்சியை ரித்தேஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, என் அம்மா, அப்பா எனக்கு தம்பி பாப்பாவை பரிசளித்துள்ளனர். தற்போது என் பொம்மைகள் எல்லாம் அவனுடையது...லவ் ரியான் என்று தெரிவித்துள்ளார்.
Labels:
News
,
others
No comments :
Post a Comment