அதிக நேரம் உழைக்கும் இந்திய இளைஞர்கள் (இன்போகிராபிக்ஸ்)
அண்மையில் நடந்த ஆய்வு ஒன்றில், உலகம் முழுக்க உள்ள இளைஞர்கள் எவ்வளவு மணிநேரம் வேலை செய்கிறார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. முக்கியமாக "Millenials" எனப்படும் இளைஞர்கள், வாரத்திற்கு குறைந்தது 40 மணி நேரம் உழைக்கின்றனர். Millenials என்பது 1980 முதல் 2000 வரை பிறந்தவர்களைக் குறிப்பிடும் சொல்லாகும்.
இளைஞர்கள் என்றால் சோம்பேரி எனும் பொதுவான கருத்தை உடைத்து எறிவதைப் போல இந்த ஆய்வு முடிவுகள் உள்ளன. உலகளவில், முக்கால்வாசி இளைஞர்கள் வாரத்திற்கு 40 முதல் 50 மணிநேரம் வரை வேலை செய்கின்றனர். முக்கியமாக ஆசியாவின் இளைஞர்கள் அதிகம் வேலை செய்கின்றனர். இந்தியாவில் அதிகபட்சமாக சராசரியாக 52 மணிநேரம் இளைஞர்கள் வேலை செய்கின்றனர்.
உலகம் முழுவதும் 25 நாடுகளில் இருந்து ஏறத்தாழ 19,000 இளைஞர்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், இந்திய இளைஞர்கள்தான் மற்ற நாடுகளைவிட அதிக மணிநேரம் உழைக்கின்றனர் எனத் தெரியவந்துள்ளது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment