காதலுக்கு கருப்பு கொடி காட்டிய தந்தையை போட்டு தள்ளிய மகள்
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தையை, மகள் தன் காதலுடன் சேர்ந்து திட்டம் தீட்டி கொலை செய்யதுள்ளார்.
கோவை சொக்கம்புதூரை சேர்ந்த நாகராஜன் என்னும் விவசாயி கடந்த மே 23ஆம் தேதி நெகமம் அருகே உள்ள தனது தோட்டத்திற்கு சென்றவர், மறுநாள் காலை சாலையில் இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அந்த விவசாயின் மகள் மகாலட்சுமி அவரது காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் தந்தையை தனது காதலன் சதீசுடன் சேர்ந்து திட்டம் தீட்டி கொலை செய்துள்ளார்.
கொலையை மகாலட்சுமி காதலனின் நண்பர்கள் கூலிப்படையாக செயல்பட்டதும், அதற்கு மகாலட்சுமி ரூ:1½ லட்சம் பேரம் பேசியதும், விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மகாலட்சுமி, அவரது காதலன் சதீஷ், மற்றும் கொலை செய்த நபர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் நாகராஜின் மனைவி தலைமறைவாகி விட்டதால் அவர் மீதும் இந்த கொலைக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment