லாரன்ஸ் ஏன் வேண்டாம்னு சொன்னார்...?
ரஜினி முருகன் முடிந்ததும் பொன்ராம் விடுத்த ஸ்டேட்மெண்ட் மெமரி பிளஸ் உள்ளங்களுக்கு நினைவிருக்கும்.
ஒரு கதை தயார் செய்திருக்கிறேன். அது லாரன்சுக்கு ஆப்டாக இருக்கும், அவரை சந்தித்து கதை சொல்லப் போறேன் என்று அறிவித்தார்.
வாலன்ட்ரியா வண்டியிலேறிய பொன்ராம் விரும்பிய இலக்கை எட்டினாரா என்றால் இல்லை. பாதி வழியிலேயே வண்டி பஞ்சர்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என்று அடுத்தடுத்த ஹிட் கொடுத்த இயக்குனரின் படத்தில் நடிக்க யாருக்குதான் கசக்கும்? பொன்ராமின் அடுத்தப் படத்தில் லாரன்ஸ்தான் ஹீரோ என்று அனைவரும் நம்பிக் கொண்டிருக்க, கதை பிடிக்கலை என்று பொன்ராமின் விருப்பத்தில் விளக்கெண்ணெய் ஊற்றினார் லாரன்ஸ்.
அதனாலென்ன...?
மோகன்ராஜா படம் முடிந்ததும் நாம ஜமாய்க்கலாம் என்று பொன்ராமுக்கு வாக்கு தந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். வழக்கம்போல் பக்கவாத்தியமாக சூரி.
போட்டு தாக்குங்க பாஸ்.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment