பீனிக்ஸ் பறவையை போல் விஜயகாந்த் சுற்றுப்பயணம்: கட்சியினரை சமாதானப்படுத்த திட்டம்
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக படு தோல்வியடைந்தது. இந்த தேர்தலில் உளுந்தூர் பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த் டெபாசிட் கூட வாங்கவில்லை.
கட்சியின் செல்வாக்கு, வாக்கு வங்கி, மாநில கட்சிக்கான அங்கீகாரம், முரசு சின்னம் அனைத்தையும் இழந்து பரிதாபமாக நிற்கும் தேமுதிகவை மீண்டும் புத்துணர்ச்சியுடன் செயல்பட வைக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
தொடர் தோல்விகளால் துவண்டுள்ள தேமுதிகவில் தேர்தலுக்கு முன்னரே சிலர் வேறு கட்சிக்கு தாவினார்கள். இந்நிலையில் தேமுதிக மோசமான நிலையில் உள்ளதால் மேலும் பலர் வேறு கட்சிக்கு தாவ தயாராகி வருவதாக தகவல்கள் வருகின்றன.
இடனையடுத்து இவர்களை சமாதனப்படுத்த விஜயகாந்த் இந்த சுற்றுப்பயண திட்டத்தை ஆரம்பிக்க இருப்பதாக தேமுதிக வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னரே இந்த சுற்றுப்பயணத்தை முடித்து, உள்ளாட்சி தேர்தலை நம்பிக்கையுடன் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Labels:
News
,
other
No comments :
Post a Comment