கண்ணீர் விட்டு அழுத முன்னாள் மூத்த அமைச்சர்: காரணம் என்ன தெரியுமா?

Share this :
No comments


உத்தரபிரேதச மாநில முன்னாள் மூத்த அமைச்சர் பல்ராம் யாதவ் செய்தியாளர்கள் முன்னிலையில் கண்ணீர் விட்டு அழுதார். அகிலேஷ் யாதவ் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர் பல்ராம். இவர் நேற்று அதிரடியாக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.

அமச்சரவையில் இருந்து திடீரென நீக்கப்பட்ட பல்ராம் யாதவை இன்று செய்தியாளர்கள் சந்தித்து, இதுகுறித்த கேள்வி எழுப்பினர்.

செய்தியாளர்களிடம் சோகமான குரலில் பேசிய பல்ராம் யாதவ், ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுது விட்டார். அப்போது அவர் சமாஜ்வாதிக் கட்சி தான் தனது உயிர் என தெரிவித்தார்.

குவாமி ஏக்தா என்ற முஸ்லீம் கட்சியை சமாஜ்வாதி கட்சியுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பல்ராம் யாதவின் நடவடிக்கையில் அதிருப்தியடைந்த முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது. மேலும் பல்ராம் யாதவுக்கு பதிலாக அவருடைய மகன் அமைச்சரவையில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments :

Post a Comment