பி.வாசுவின் சிவலிங்காவில் ரித்திகா சிங்
பி.வாசு இயக்கத்தில் கன்னடத்தில் வெற்றி பெற்ற படம், சிவலிங்கா. இதனை தமிழில் சந்திரமுகி இரண்டாம் பாகமாக ரஜினியை வைத்து எடுக்க முயன்றார் வாசு.
ஆனால் கிடைத்தது லாரன்ஸ். அவர்தான் சிவலிங்காவின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் வாசுவின் மகன் சக்தி.
இந்தப் படத்துக்கு நாயகி தேடிக் கொண்டிருந்தனர். தற்போது இறுதிச்சுற்று ரித்திகா சிங்கை ஒப்பந்தம் செய்துள்ளனர். சிவலிங்காவில் நாயகிக்கு நாயகனுக்கு இணையான வேடம், ரித்திகா அதற்கு பொருத்தமாக இருப்பார் என்று வாசு கூறியுள்ளார்.
ஒரு கொலையை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டதுதான் சிவலிங்கா படம்.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment