திமுக தோல்விக்கு எனது ராஜதந்திரம்தான் காரணம் - கொக்கரிக்கும் வைகோ

திமுக ஆட்சிக்கு வர முடியாததற்கு எனது ராஜதந்திரம்தான் காரணம் என்று திருச்சியில் நடைபெற்ற மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாலர் வைகோ கூறியுள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த வாளாடியில், திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பணத்திற்கு அடிபணிய மாட்டார்கள். சேவை செய்பவர்களை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து மக்கள் நலக்கூட்டணி தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து எந்தெந்த பதவிகளில் போட்டியிடுவதும் என முடிவு செய்யப்படும். என்னை ராஜதந்திரம் இல்லாதவர் என கருணாநிதி நினைத்து கொண்டிருந்தார். ஆனால், எனது ராஜதந்திரத்தால்தான், ஆட்சி அமைக்க வேண்டிய வாய்ப்புகள் இருந்தும்கூட திமுக ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்பதை மறுக்க முடியாது. இந்த நிமிடம் வரை நமது இயக்கத்தை அழிக்க நினைத்து நிர்வாகிகளை இழுத்து வருகின்றார்கள். நம்மை அழிக்க நினைத்தார்கள், அவர்கள் அழிந்து போய்விட்டார்கள். எங்களுக்காக நீங்கL இருக்கிறீர்கள், உங்களுக்காக நான் இருக்கிறேன். இதுதான் நமது இயக்கத்தின் பிணைப்பு. நான் எப்போதும் கட்சிக்கு உண்மையாக இருப்பவர்களை கைவிடமாட்டேன்” என்று கூறியுள்ளார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment