கபாலியில் சொல்ல பெரிதாக எதுவுமில்லை
கபாலியில் மூன்று வில்லன்களில் ஒருவராக கிஷோர் நடித்துள்ளார். கபாலி குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பெரிய தங்க செயின்கள் காப்புகள் அணிந்து வழக்கமான வில்லனாகத்தான் கபாலியில் வருகிறேன்.
அதைப் பற்றி சொல்ல பெரிதாக எதுவுமில்லை என கூறினார்.
ரஞ்சித் இயக்கியிருக்கும் கபாலிக்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு உள்ளது. ஜுன் 12 படத்தின் பாடல்களை வெளியிடுகின்றனர். ரஜினி இல்லாமலே இந்த வெளியீடு நடக்க உள்ளது.
கபாலியில் மொத்தம் மூன்று வில்லன்கள். இது குறித்து பதிலளித்த கிஷோர், ரஜினி வில்லன்களுக்கெல்லாம் வில்லன். அவருக்கு ஒரு வில்லன் போதாது என்று கூறினார். மலேசியாவின் சமூக, பொருளாதார, அரசியல் கபாலி கதையுடன் இணைந்து வரும் என்றும், மலேசியாவின் நிழல் உதகை பற்றியது கபாலி எனவும் அவர் கூறினார்.
கபாலியில் கிஷோர் சாதாரண வில்லனாக வருகிறார். அதனை வைத்தே, தனது கதாபாத்திரத்தை குறித்து பேச பெரிதாக எதுவும் இல்லை என கூறியுள்ளார்.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment