ஜெயலலிதா பேனருக்கு பின்னால் அன்புமணி!: அரசியலை கடந்த ஒரு நிகழ்வு

Share this :
No comments

கடந்த சனிக்கிழமை பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி, சென்னையில் பேரணி நடைபெற்றது. இதில், பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கலந்து கொண்டார். இந்த பேரணியில் கோட்டை வரை சென்று முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.




இந்த பேரணியில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, மதிமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, நாம் தமிழர் கட்சியின் சீமான், வி.சி.கவின் வன்னியரசு, தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன் உள்ளிட்டவர்களும், திரையுலகில் இருந்து சத்யராஜ், விக்ரமன் உள்பட பலரும் பங்கேற்றனர்.

இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் அடங்கிய பேனர் பிதானமாக கொண்டு செல்லப்பட்டது. அதில் கவலைப்படாதீங்க உங்க மகன் உங்களிடம் வந்திடுவார் என முதல்வர் ஜெயலலிதா அற்புதமாவிடம் சொல்லும் வாசகத்துடன் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.

இந்த பேரணியில், அற்புதம் அம்மாளுடன் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் பேனர்களை அன்புமணி, சீமான் உள்ளிட்டவர்கள், அரசியல் கடந்து உயர்த்திப் பிடித்து வந்ததை காண முடிந்தது.

மேலும் இந்த பேரணியில் பலர் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் அடங்கிய போஸ்டர்களை ஏந்தியபடி வந்தனர். 7 தமிழர்களின் விடுதலைக்காக அரசியல் பாராமல் அன்புமணி போன்ற தலைவர்கள் கலந்து கொண்டது அனைவருக்கும் ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும் அளித்தது.

No comments :

Post a Comment