விராட் கோலி, அனுஷ்கா சர்மா இச்சு, இச்சு: விமான நிலையத்தில் நடந்த காதல் பரிமாற்றம்!

Share this :
No comments


படப்பிடிப்புக்காக புடபெஸ்ட் கிளம்ப மும்பை விமான நிலையம் வந்த நடிகை அனுஷ்கா சர்மாவை வழியனுப்ப வந்த அவரின் காதலர் கிரிக்கெட் வீரர் விராட் கோலி கட்டி அனைத்து முத்தம் கொடுத்தார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தனர். சுல்தான் பட விவகாரத்தில் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு வந்து பிரிந்தனர். இதனையடுத்து இவர்கள் விவகாரம் ஊடகங்களில் ஊதி பெரிதாக்கப்பட்டது.

ஆனால் சமீபத்தில் கோலியும், அனுஷ்காவும் ஜோடியாக இரண்டு முறை உணவகங்களுக்கு சென்று சாப்பிட்டுள்ளனர். மேலும் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை பெங்களூர் அணி வீழ்த்தியதை கோலி அனுஷ்காவுடன் சேர்ந்து கொண்டாடினார். இதனால் இவர்கள் மீண்டும் சேர்ந்ததாக பேசப்பட்டது.

இந்நிலையில் எந்த படத்தால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு வந்ததோ அந்த சுல்தான் படத்தின் படப்பிடிப்பு புடபெஸ்ட்டில் நடைபெற உள்ளது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள அனுஷ்கா சர்மா நேற்று இரவு மும்பையில் இருந்து விமானம் மூலம் புடபெஸ்ட் கிளம்பினார்.

அனுஷ்கா சர்மாவை வழியனுப்ப வந்த விராட் கோலி அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். இதனையடுத்து காதலர்கள் மீண்டும் இணைந்து விட்டனர் என பேசப்படுகிறது.

No comments :

Post a Comment