ராஜீவ் கொலை வழக்கு : கைதிகளை விடுவிக்க சென்னையில் பேரணி

Share this :
No comments


மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் பேரணி நடத்தப்பட்டது.

முதலில் இந்த பேரணி வேலூரில் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால், அங்கு பேரணி நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அந்த பேரணி சென்னைக்கு மாற்றப்பட்டது. இந்த போராட்டத்தில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கலந்து கொண்டார். இந்த பேரணி கோட்டை வரை சென்று முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளிக்கப்படுகிறது.

இந்த பேரணி இன்று பிற்பகல் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் இருந்து புறப்பட்டது. அந்த பேரணியில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், நாம் தமிழர் கட்சி சீமான், இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், நடிகர்கள் தியாகு, சத்யாராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், தன்னுடைய மகன் பேரறிவாளன் உட்பட 7 பேரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புவதாக கருத்து தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment