பரோட்டா சூரியாக மாறிய சூரி எத்தனை பரோட்டா சாப்பிட்டார் தெரியுமா?...
காமெடி நடிகர் சூரியைப் பிரபலப்படுத்திய பரோட்டொ சீனில் எத்தனை பரோட்டா சாப்பிடீங்க என்ற கேள்விக்கு அவரே பதில் அளித்துள்ளார்.
நடிகர் சூரி, டுவிட்டர் மூலம் ரசிகர்களின் கேள்விக்குப் பதில் அளித்தார். இதற்காக #asksoori மற்றும் #askpushpapurushan என்ற பெயரில் ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டிருந்தன. டுவிட்டரில் ட்ரெண்ட் ஆன இந்த ஹேஷ்டேக்குகள் மூலம் ரசிகர்கள் பலரும், சூரியுடன் நடித்த பிரபலங்கள் பலரும் பல சுவாரஸ்ய கேள்விகளைக் கணைகளைத் தொடுத்தனர்.
அதில் சூரி, பரோட்டா சூரியாக மாற முக்கியமான காரணமான வெண்ணிலாக் கபடிக் குழு படத்தில் இடம்பெறும் பிரபலமான பரோட்டா சாப்பிடும் சீனில் எத்தனை பரோட்டாக்கள் சாப்பிடீர்கள் என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்குப் பதில் அளித்த சூரி, ஒரு 17 இருக்கும் என்று கூறினார்.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment