சுவாதியின் பேஸ்புக் நண்பரிடம் விசாரணை: கொலையாளியை நெருங்கும் காவல் துறை

Share this :
No comments


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியை கொலை செய்த கொலையாளியை கண்டுபிடிக்கும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

சுவாதியின் பேஸ்புக் பக்கத்தை முடக்கி அதை ஆய்வு செய்ததில் சுவாதி இரண்டு பேரிடம் அதிகமாக சாட் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரையும் வரவழைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் காவல் துறையினர். அதில் ஒருவரின் தோற்றம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள நபரின் உருவத்துடன் ஒத்துப்போவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த நபர் தான் சுவாதியை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர் காவல் துறையினர். மேலும் சுவாதி கொலையில் விரைவில் துப்பு துலங்கும் எனவும், குற்றவாளியை நெருங்கிவிட்டோம் எனவும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.

No comments :

Post a Comment