மாடர்னாக மாறிட்டேன்...
லட்சுமி மேனன் என்று எழுதிக் காட்டினாலே பாவாடை தாவணிதான் நினைவுக்கு வரும். கிராமத்து வேடத்திலேயே அவரைப் பார்த்ததால் வந்த பாதிப்பு.
முதல்முறையாக றெக்க படத்தில் பாவாடை தாவணிக்கு விடை கொடுத்து ரொம்பவும் மாடர்ன் கேர்ளாக நடிக்கிறார். வேதாளம் படத்தில் மாடர்ன் உடையில் வந்தாலும் அவை பாரம்பரியம் மாறாமல் இருந்தன. றெக்க அதுக்கும் மேல.
ரத்ன சிவா இயக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் முதல்முறையாக இணைந்திருக்கிறார்கள். மதுரை, கும்பகோணம், காரைக்குடியில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
வேதாளம் போலவே இதிலும் மாணவியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment