சட்டசபையில் 23-ஆம் புலிக்கேசி என திமுகவை விமர்சித்த அதிமுக: அமளியில் திமுகவினர்

Share this :
No comments


தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 2-வது நாளாக இன்று தொடர்ந்து நடந்து வருகிறது. இன்றைய கூட்டமும் நேற்று போல் கூச்சல், அமளி என அமர்க்களமாக நடந்து வருகிறது.

இன்றைய விவாதத்தை தொடங்கி வைத்த அதிமுக உறுப்பினர் வெற்றிவேல், சிலர் தேர்தல் சமயத்தில் 23-ம் புலிகேசி போல் சென்று தேர்தல் பிரசாரம் செய்தனர் என திமுகவின் நமக்கு நாமே திட்ட பிரச்சாரத்தை மறைமுகமாக தாக்கி பேசினார்.

அதிமுக உறுப்பினரின் இந்த பேச்சுக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுகவின் எதிப்புக்கு அதிமுக தரப்பில் பதில் அளிக்கப்பட்டதும், மேலும் ஆவேசமடைந்த திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த விவாதத்தின் போது இரு கட்சி உறுப்பினர்களும் கை நீட்டி பேசியதால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. உடனடியாக குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், உறுப்பினர்கள் அவை மரபுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். தேவையில்லாமல் கூச்சலிட்டு கூட்ட நேரத்தை வீணடிக்க கூடாது என அறிவுறுத்தினார்.

இதனையடுத்து இந்த கூச்சல், குழப்பம் அமைதியாகி பின்னர் விவாதிக்க ஆரம்பித்தனர்.

No comments :

Post a Comment