கோவா எம்எல்ஏ மீது இளம்பெண் கற்பழிப்பு புகார்

பனாஜி:
கோவா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் கல்வித்துறை மந்திரியாக இருந்தவர் தற்போது அவர் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அடனாசியோ மான்செர் ரேட் என்ற பாபுஷ். இவர் பனாஜியில் ‘லைப் ஸ்டைல்’ என்ற நிறுவனம் நடத்தி வருகிறார்.
இங்கு பணிபுரிந்த மைனர் இளம்பெண் சமீபத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் மாயமாகி விட்டார். இது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி கண்டு பிடித்தனர்.
அப்போது அவர் மான் செர்ரேட் எம்.எல்.ஏ. தன்னை அடைத்து வைத்து பல நாட்கள் கற்பழித்ததாக போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மான்செர்ரேட் கடந்த ஆண்டு காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டார்.
தன்மீதான புகாரை மான்செர்ரேட் மறுத்தார். அந்தப் பெண்ணை எனது நிறுவனத்தில் இருந்து நீக்கினேன். இதனால் என் மீது வேண்டும் என்றே பொய் புகார் கொடுத்துள்ளார்.
என் மீதான வழக்கை சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறேன். எங்கும் தப்பி ஓட மாட்டேன் என்றார்.
சில வருடங்களுக்கு முன் ஜெர்மனியைச் சேர்ந்த இளம்பெண்ணை கற்பழித்ததாக மான்செர்ரேட் மகன் மீதும் வழக்குப்பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Labels:
News
,
politics
No comments :
Post a Comment