ஓட்டு போட சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும்

Share this :
No comments


வாக்குப்பதிவு நாளன்று தொழிலாளர்கள் அனைவருக்கும் சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என்று தொழிலகப் பாதுகாப்பு சுகாதார இயக்குநர் பி.போஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் 100 சதவிதம் வாக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவதுடன் பொது மக்களிடையே வாக்களிக்கும் உரிமை பற்றி விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரையுடன், தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் நிரந்தர, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மே 16-ஆம் தேதி சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என்று தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்குநர் பி.போஸ் தெரிவித்துள்ளார்.

இதை நடைமுறைப் படுத்தினால் வெளி ஊர்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைப்பதுடன் உரிமையும் பறிப்போகாது. மேலும் இது அனைவரையும் வாக்களிக்க செய்யவதற்கு ஒரு அருமையான செயல்பாடாகும்.

No comments :

Post a Comment