அதிமுக அரசின் திட்டங்கள் திமுக ஆட்சியில் தொடரும்: ஸ்டாலின்

Share this :
No comments


அதிமுக ஆட்சியில் உள்ள மக்கள் நல திட்டங்கள் திமுக ஆட்சியில் மேம்படுத்தப்பட்டு தொடரப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்படும் மக்கள் நல திட்டங்கள் தொடரும். எம்ஜிஆர் தொடங்கிய சத்துணவுத் திட்டத்தில் முட்டையை சேர்த்து வழங்கிய கருணாநிதி, தற்போது அதனுடன் பாலும் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் முந்தைய அரசின் திட்டங்கள் முடக்கப்படமாட்டாது. தொடர்ந்து செயல்படுத்தப்படும். ஜெயலலிதா ஆட்சியில் உள்ள மக்கள் நல திட்டங்கள் திமுக ஆட்சிக்கு வந்த பின்னரும் தொடரும்.

முறையாக நடத்தப்படாமல் இருக்கும் அம்மா உணவகம், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சிறப்பாக செயல்படுத்தப்படும். மேலும் அம்மா உணவகம், அண்ணா உணவகமாக பெயர் மாற்றம் செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

No comments :

Post a Comment