ஐபோன் பெயரை ஆப்பிள் நிறுவனம் உபயோகிக்க தடை

Share this :
No comments


ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோனுக்கு தற்போது புதிய பிரச்சனை ஒன்று வந்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது மொபைலை ஐபோன் என்ற பெயரில் விற்பனை செய்யக்கூடாது.

உலகின் பெரிய சந்தைகளில் ஒன்று சீனா. சீனாவில் தன் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பெயருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த காலாண்டு விற்பனையில் 11 சதவீத சரிவை கண்ட ஆப்பிள் ஐபோனுக்கு இந்த தடை மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது.

சீனாவில் ஹேண்ட் பேக் தாயரிக்கும் நிறுவனமான ஜிண்டாங் டியான்டி, ஐபோன் என்ற பெயரை பயன்படுத்தி வருகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக வழக்கின் முடிவு ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிராக அமைந்தது. இதனை எதிர்த்து ஆப்பிள் நிறுவனம் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த 2009-இல் இருந்து தான் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மாடல்களை சீனாவில் விற்க தொடங்கியது. ஆனால், 2007 முதலே ஜிண்டாங் டியான்டி நிறுவனம் ஐபோன் என்ற பெயரில் ஹேண்ட் பேக்குகள் மற்றும் மொபைல் போன் கவர்களை விற்பனை செய்துவருகிறது என்றது.

இதனையடுத்து சீனாவில் ஐபோன் என்ற பெயரை ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தத் நீதிமன்றம் தடை உத்தரவிட்டது.