அவர் மனுஷனே அல்லாத வில்லன் : விஷால் கருத்து
வில்லன் கதாபாத்திரம் எத்தனை கொடூரமாக இருக்கிறதோ, அதே அளவுக்கு கதாநாயகனின் வீரம் கூர்மையடையும்.
பாலா போன்ற ஒருசில இயக்குனர்களின் படங்களில் வில்லன்கள் நரகத்தில் டிஸைன் செய்யப்பட்டு பூலோகத்தில் இறக்கிவிடப்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் ஒவ்வொரு செயலிலும் கொடூரம் பளீரிடும். முத்தையாவும் பாலாவை நெருங்குகிறார்.
கொம்பன் படத்தில் முத்தையா வில்லனாக அறிமுகப்படுத்தியது, ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பாராயன். அவரது கன்னங்கரேலென்ற கம்பீர தோற்றமும், கரடுமுரடான குரலும் அவரது வில்லன் கதாபாத்திரத்துக்கு தனி மிடுக்கை தந்தது. வரவிருக்கும் மருது படத்தில் முத்தையா வில்லனாக களமிறக்கியிருப்பது, தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷை. பாலாவின் தாரை தப்பட்டையில் மூக்கு வழியாக கஞ்சா புகைத்து வாய் வழியாக புகைவிடும் அதே ஆள்.
ஆர்.கே.சுரேஷின் மருது கதாபாத்திரம் குறித்து விஷால் பேசும் போது, "வில்லனாக வரும் ஆர்கே சுரேஷ் ஒரு மனுஷனே கிடையாது. அவர் ஒரு பேய், ராட்சசன் என்று கூறலாம். அந்த அளவுக்கு வெளுத்து வாங்கியிருக்கிறார். எங்கள் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் நேஷனல் ஜியாகிரபி போல மிரட்டும்" என்றார்.
எதற்கும் எச்சரிக்கையாகவே தியேட்டருக்கு செல்லுங்கள்.
Labels:
cinema seithigal
No comments :
Post a Comment