இந்தியாவில் வாட்ஸ்அப்-க்கு தடை: உச்ச நீதிமன்றத்தில் மனு

Share this :
No comments


சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றாக விளங்கும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப்-க்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தை அனுகியுள்ளார்.

வாட்ஸ்அப் தற்போது புதிய மாற்றம் ஒன்றை செய்துளது, என்கிரிப்ஷன் எனப்படும் இந்த புதிய வசதி மூலம் வாடிக்கையாளர்கள் அனுப்பும் தகவல்களை வேறு யாராலும் பார்க்க முடியாது. அதாவது தகவலை அனுப்புபவர் மற்றும் பெறுபவர் மட்டுமே அதை பார்க்க முடியும். வாட்ஸ்அப் நிர்வாகத்தால் கூட அதை கண்காணிக்க முடியாது.

குர்கானை சேர்ந்த சுதிர் என்பவர் இதனை எதிர்த்து வாட்ஸ்அப்-ஐ தடை செய்ய நீதிமன்றம் சென்றுள்ளார். இந்த புதிய என்கிரிப்ஷன் வசதியால் தீவிரவாதிகள் நாட்டை சீரழிக்கும் செயலில் ஈடுபடலாம். இந்திய காவல் துறையாலோ, உளவுத்துறையாலோ இதனை கண்காணிக்க முடியாது. எனவே இந்தியாவின் பாதுகப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வாட்ஸ்அப்-ஐ இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதே போன்று சமீபத்தில் பிரேசிலில் பொதைப்பொருள் வழக்கு ஒன்றில் நீதிமன்றம் கேட்ட வாட்ஸ்அப் தகவலை அந்த நிறுவனத்தால் கொடுக்க முடியவில்லை. இதனால் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வாட்ஸ்அப்-க்கு 72 மணி நேரம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment