8 வயது சிறுமி சீரழிக்கப்பட்டு மாடியில் இருந்து வீசி படுகொலை.. பாக்.கில் பயங்கரம்
கராச்சி: பாகிஸ்தானில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வீட்டு மாடியில் இருந்து வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசித்து வந்த 8 வயது சிறுமி சனிக்கிழமை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அவரது வீட்டு மாடியில் இருந்து வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி ஒருவர் மாடியில் இருந்து விழுந்து பலியான தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. மாடியில் இருந்து வீசப்பட்டதில் அவரது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு அவர் பலியானதும் தெரிய வந்தது.
இந்நிலையில் சிறுமியின் குடும்பத்தாரோ அவர் வீட்டு மாடியில் விளையாடச் சென்றபோது கால் தவறி கீழே விழுந்து இறந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டும் அவரின் குடும்பத்தார் ஏன் அதை மறைத்து வேறு விதமாக கூறினார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Labels:
News
,
others