கடலூரில் சீமான் படுதோல்வி: 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்

Share this :
No comments


கடலூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் படுதோல்வி அடைந்தார். அவர் ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

தமிழக அரசியல் களத்தில் முதன் முதலாக குதித்த நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் போட்டியிட்டார்.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதலே எண்ணப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே நாம் தமிழர் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வி முகத்திலேயே இருந்தனர்.

கடலூரில் போட்டியிட்ட சீமான் படுதோல்வியடைந்து ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.சி.சம்பத் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் புகழேந்தி இரண்டாம் இடமும், தமாகா வேட்பாளர் சந்திரசேகரன் மூன்றாவது இடம், பாமக வேட்பாளர் தாமரைக் கண்ணன் நான்காம் இடமும், நாம் தமிழர் சீமான் ஐந்தாவது இடமும் பிடித்தார்.

No comments :

Post a Comment