நிறுவனங்களின் பேரளவு தரவுகளை நிருவகிப்பதற்காக Spreadmart எனும் கருவியை பயன்படுத்திகொள்க.

Share this :
No comments

ஏராளமான நிறுவனங்கள் தங்களின் வியாபார பயன்பாட்டிற்காக இருபத்தைந்து அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய மென்பொருட்களையே பயன்படுத்தி கொண்டிருப்பார்கள் ஆயினும் அதே நிலையும் கட்டுப்பாடும் தற்போது தொடரவில்லை என்பதே உண்மைநிலையாகும் அதிலும் எம்எஸ் எக்செல் எனும் பயன்பாட்டினை எளிய வரைபடங்கள், அறிக்கைகள், தரவுகளுக்கான வினாக்கள், திட்டங்கள், வருங்காலத்திற்காக எதிர்பார்க்கபடும் அறிக்கைகள், இயக்கஅறிக்கைகள் ஆகியவற்றை உருவாக்கி தனிநபர்கள் முன்பு பயன்படுத்தி வந்தனர் குறைந்த செலவு பயன்படுத்த எளிதானது என்ற இதனுடைய தன்மையால் ஏராளமான தனிநபர்கள் தங்களின் தேவைக்காக பயன்படுத்தி வந்தனர் ஆனால் இது ஏராளமான தனிநபர்கள் பலர் பணிபுரியும் பெரிய நிறுவனங்களுக்கு தவறான தகவல் அமைவாக இருக்கின்றது இவ்வாறான பல்வேறு தனிநபர்களின் தகவல்களை ஒருங்கிணைத்து ஒற்றையான அறிக்கையாக தயாரிக்கும்போது அதன் நோக்கத்திலிருந்து விலகிசெல்லவாய்ப்பு அதிகமாக உள்ளது ஏனெனில் பல்வேறு பரந்துபட்ட நபர்களின் அனைத்து தகவல்களையும் சேகரித்து ஒருங்கிணைத்து ஒற்றையான அறிக்கையை உருவாக்குவது என்பது மிகப்பெரிய தலைவலி பிடித்தபணியாகிவிடுகின்றது அதனால் பொதுவாக எந்தவொரு நிறுவனத்திலும் இந்த பணியானது தகவல்தொழில்நுட்ப பிரிவு பணியாகும் என தட்டி கழித்துவிடும் நிலைக்கு தள்ளிவிடப்படுகின்றது மேலும் பலநிறுவனங்களும் இந்த விரிதாள் என்றால் காததூரம் ஓடிவிடும் நிலையில் உள்ளனர் அவ்வாறான பெரிய நிறுவனங்களுக்காகவே ஆபத்திற்கு கைகொடுப்பவனாக Spreadmart எனும் கருவி உள்ளது இந்தSpreadmart எனும் கருவியானது பார்வைக்கு விரிதாளினை போலிருந்தாலும் இதன் செயல்பாடுகள் தரவுசந்தையாக (data mart) அல்லது தரவு கிடங்காக (data warehouse) அமைந்துள்ளது அதாவதுஇது spreadsheet, data mart ஆகிய இரண்டும் சேர்ந்து உருவான பெயராகும். பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் பல்வேறு நபர்களால் அல்லது குழுவான பலநபர்களால் பல்வேறு சூழலில் உருவாக்கபட்ட பல்வேறு விரிதாட்களில் உள்ள ஒழுங்கமைதியற்ற தரவுகளை ஒருங்கிணைத்து அந்நிறுவனத்தின் அறிக்கைகள் சிறப்பாக அமைந்திட இந்த Spreadmart எனும் கருவி உதவுகின்றது

No comments :

Post a Comment