பெண்ணின் அந்த இடத்தில் தட்டிய உள்துறை அமைச்சர்: தீயா பரவும் வீடியோ காட்சி

Share this :
No comments

மத்திய பிரேதேச மாநில முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய உள்துறை அமைச்சருமான பாபுலால் கவுர் பெண் ஒருவரின் பின்புறம் கையால் தட்டும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 85 வயதான பாபுலால் கவுர் மத்திய பிரதேசத்தின் உள்துறை அமைச்சராக இருக்கிறார். போபால் அருகே நேற்று பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைத்த அவர் பஸ்ஸில் ஏறும் ஒரு பெண்ணின் பின்புறத்தை கையால் தட்டுவது போல் ஒரு வீடியோ உள்ளூர் தொலைக்கட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் அமைச்சரின் இந்த செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த வீடியோ காட்சியில் இருப்பது உண்மையில்லை எனவும், பேருந்தில் வேகமாக ஏற பாஜக பெண் தொண்டர்களை தான் கேட்டுக்கொண்டதாகவும் அமைச்சர் பாபுலால் கவுர் விளக்கமளித்துள்ளார்.

No comments :

Post a Comment