இதய நோய்க்கான காரணங்கள்
* பிறவிக் குறைபாடு * உயர் ரத்த அழுத்தம் * ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிப்பு * சர்க்கரை நோய் * புகைபிடிக்கும் பழக்கம் * மது அருந்துதல் * போதைப் பழக்கம் * மன அழுத்தம் * உடல் பருமன் * சுய மருத்துவம் * நோய்த் தொற்றுகள் இதய நோய்க்கான வாய்ப்பு அதிகரிப்பு வயது: வயது அதிகரிக்கும்போது இதயத் தசைகள் தளர்ச்சி அல்லது தடிமனாகுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, குறுகுவதற்குமான வாய்ப்பும் அதிகரிக்கிறது. பாலினம்: பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில் இதய நோய்க்கான வாய்ப்பு அதிகம். மரபியல்: ரத்த உறவில் யாருக்கேனும் இதய நோய்கள் இருந்தால், அவர்களின் சந்ததியினருக்கு ரத்தக் குழாய் அடைப்பு நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். புகைப் பழக்கம்: சிகரெட் புகைக்கும்போது அதில் உள்ள நிக்கோடின் ரத்தத்தில் கலக்கிறது. நிக்கோடின் ரத்தக் குழாய்களை சுருக்கும் தன்மை கொண்டது. மேலும், கார்பன் மோனாக்சைட் ரத்தக் குழாய்களின் உட்புறச் சுவரைப் பாதித்து இதய நோய்களை ஏற்படுத்தும். சிகரெட் புகைக்காதவர்களை விட, சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மிகமிக அதிகம். ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால்: ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும்போது, அது ரத்தக் குழாயில் படிந்து ரத்த ஓட்டத்தைத் தடை செய்்கிறது. மோசமான உணவுப் பழக்கம்: சாப்பிடும் உணவில் அதிக அளவில் கொழுப்பு, உப்பு, சர்க்கரை போன்றவை இருந்தால், அது இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தம்: கட்டுப்பாடற்ற உயர் ரத்த அழுத்தம், ரத்தக் குழாய்களைத் தடிமனாக்கி கடினமானதாக்கி விடும். இதனால் ரத்தக் குழாய் சுருங்கும்போது ரத்த ஓட்டம் தடைபடும். தவிர சர்க்கரை நோய், உடல் பருமன், மன அழுத்தம், உடல் உழைப்புக் குறைவு, சுகாதாரமற்ற சூழல் கூட இதய நோய்க்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
Labels:
health
,
other
No comments :
Post a Comment