பறவைகள் வி வடிவத்தில் பறப்பது பற்றிய ரகசியம் தெரியுமா ??
பறவைகள் கூட்டமாக பறப்பதை கவனித்திருந்தால் அவை ஒரே சீராக வி வடிவத்தில் பறப்பதை காணலாம். சென்னையில் காக்கை மட்டுமே காண முடியும் என்பதால் கொஞ்சம் வெளியில் வந்து சீதோஷண காலங்களில் பார்த்தால், நீண்ட தொலைவிலிருந்து வரும் கொக்கு நாரை போன்ற வெளி நாட்டுப்பறவைகள்.
இந்த வடிவத்தில் பறப்பதை காணலாம். ஒரு பறவை முன்னணியில் பறந்தும் பின்னால் வரும் பறவைகள் குறிப்பிட்ட இடைவெளியில் வருவதையும் பார்க்கலாம். பொதுவாக இதன் வடிவம் "வி" என இருக்கும். அதன் காரணம் என்ன?
பறவைகள் வி வடிவத்தில் பறப்பதால் அவை அதிக அளவு ஆற்றலை சேமிக்கின்றன. இதனால் அவை வெகு தூரம் அவை தொடர்ந்து பறக்க முடிகிறது. அவை தனியாக பறப்பதினால் பயன்படுத்தப்படும் ஆற்றலைவிட இது போல் வி வடிவத்தில் பறப்பதினால் அவைகளின் ஆற்றலில் 70% வரை சேமிக்கின்றன.
பொதுவாக தனியாக ஒரு பறவை பறக்கும்பொழுது காற்றில் அதன் பின்னிழுக்கும் விசை மிக அதிகமாக இருக்கும். பறவைகள் இதுபோல வி வடிவில் பறப்பதால் அதன் பின்னுழுக்கும் விசை வலுவிழந்து சமமான மிதக்கும்விசை காரணமாக பறவைகள் தொடர்ந்து வெகுதூரம் இலகுவாக பறக்கின்றன.
முக்கியமான விஷயம் என்னவென்றால் அனைத்து பறவைகளும் இதன் காரணமாக எளிதாக பறப்பதில்லை.
படத்தில் உள்ள பறவைகளில் சிவப்பால் வட்டமிடப்பிட்டவை, காற்றிற்கு எதிராக பறக்கையில் அதிகபட்ச உராய்வினால் மிக அதிக ஆற்றலை எடுத்துக்கொள்கின்றன. எனவே மிக விரைவில் சோர்வடைகின்றன. அப்படி சோர்வடையும்போது பின்னால் வருகிற பறவைகள் தலைமை பொறுப்பை எடுத்துக்கொண்டு முன்னே வந்து தொடர்ந்து பறக்கின்றன. சோர்வடைந்த பறவை பின்னே தொடர்ந்து வரும். இப்படியே தொடர்ந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொடர்ந்து பறக்கின்றன.
இதன் காரணமாக அனைத்து பறவைகளும் தலைமை பொறுப்பை ஏற்கிற வாய்ப்பு கிடைக்கிறது. மேலும் சோர்வடையும் போது நடுவில் ஓய்வு எடுத்துக்கொள்கின்றன
இது போல பறப்பதால் எந்த பறவையும் அதன் சக பறவையை எந்த நிலையிலும் பார்க்க முடியும். இதனால் மிக நீண்ட தூரம் பறக்கையில் அனைத்துப்பறவையும் சக பறவைகளின் பார்வையில் இருக்கும். தொலைந்து விடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இதனால் அவை தொடர்ந்து கூட்டத்தை பின் தொடர்ந்து கொண்டிருக்கும்.
Labels:
other
No comments :
Post a Comment