உலகையே திரும்பி பார்க்க வைத்த ஹொட்டல் ஊழியரின் செயல்.
அமெரிக்காவின் ஜோர்ஜியா பகுதியில் அமைந்துள்ள உணவு விடுதி ஒன்றில் பணிபுரியும் ஊழியரின் செயல் ஒரு கணம் உலகையே திரும்பி தம் பக்கம் பார்க்க வைத்துள்ளது.
ஜோர்ஜியாவில் உள்ள டாக்ளஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் சம்பவத்தன்று உணவருந்த நபர் ஒருவர் வந்துள்ளார்.
உணவருந்த வந்த நபர் தமக்கு தேவையான உணவை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தார். இந்த நிலையில் உணவும் வந்தது. ஆனால் அந்த நபருக்கு இரண்டு கைகளும் இல்லாததால் எவரேனும் ஒருவர் ஊட்டி விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த உணவகத்தில் இருந்த எவரும் உடனடியாக முன்வராத நிலையில் திடீரென்று அந்த ஹொட்டலின் ஊழியர் அலெக்ஸ் அந்த நபருக்கு உதவ முன் வந்துள்ளார்.
குறிப்பிட்ட நபர் திருப்தியாக உண்டு முடிக்கும் வரை அவருக்கு உணவை ஊட்டிவிட்ட அலெக்சுக்கு தற்போது பாராட்டு குவிந்தவண்ணம் உள்ளது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் தமது கமெராவில் பதிவுசெய்த புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவேற்றி, மனிதத்தன்மை இன்னும் சாகவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஹொட்டல் ஊழியர் உணவு ஊட்டும் அந்த புகைப்படம் தற்போது வைரலாகமாறி பல நூறு பேர் அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் அந்த ஊழியரின் செயலையும் மிகவும் பாராட்டி பதிவிட்டும் வருகின்றனர்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment