தொண்டையில் நோய் தொற்று இருப்பதால் பேச முடியவில்லை: விஜயகாந்த் விளக்கம்
கன்னியாகுமரி மாவட்டம் தக் கலையில் நேற்று இரவு நடை பெற்ற பிரச்சார பொதுக்கூட்டத் தில் தேமுதிக தலைவர் விஜய காந்த் பேசியதாவது:
அதிமுக, திமுகவை புரட்டிப் போடும் மாஸ்டர்தான் இந்த விஜயகாந்த். இந்த தேர்தலில் திமுக 2-வது இடம் கூட பெறாது என ஜெயலலிதாவும், அதிமுக வுக்கு 3-வது இடம் கூட கிடைக் காது என கருணாநிதியும் மாறி மாறி பேசியுள்ளனர். இதிலிருந்தே முதலிடம் எங்களுக்கு உறுதி செய்யப்பட்டுவிட்டது தெரிகிறது. மக்கள் நலக் கூட்டணி வெற்றிபெற்று மே 20 அல்லது 21-ம் தேதி நான் முதல்வராக பதவியேற்பேன்.
திமுகவும், அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். தமிழகத்துக்கு இவ்விரு கட்சி களும் ஏதும் செய்யவில்லை. இப்போது வெளியாவதெல்லாம் கருத்துக் கணிப்பு அல்ல கருத்து திணிப்பு. பத்திரிகைகளுக்கு ஜெயலலிதா சூட்கேஸ் கொடுத்துவிட்டார்.
எனக்கு பேசத் தெரியாது என அனைத்து பத்திரிகைகளும் எழுதுகின்றன. நான் ஆங் கிலத்தில் பேசினால்தான் உங்க ளுக்கு புரியுமா? எனக்கு தொண் டையில் நோய் தொற்று ஏற்பட் டிருக்கிறது என்பதை ஏற்கெனவே எனது மனைவி சொல்லிவிட்டார். அதனாலேயே தேர்தல் பிரச்சார கூட்டங்களில் மெதுவாக பேசுங்கள் என மருத்துவரும் அறிவுரை கூறியுள்ளார்.
மாடி மேல் மாடி வைத்தது போல் ஜெயலலிதா அமைக்கும் பிரச்சார மேடை பற்றி எழுத முடியுமா? அப்படி எழுதினால் அரிவாளால் வெட்டிவிடுவாரா?. ஜெயலலிதாவும், கருணாநிதி யும்தான் தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டுமா? குப்பனும், சுப்பனும் ஆட்சி செய்யக் கூடாதா? பணம், ஜாதி உள்ளிட்ட எதனாலும் என்னை விலைக்கு வாங்க முடியாது.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
Labels:
politics
No comments :
Post a Comment