டெல்லி சென்ற ஜெயலலிதாவிற்கு உற்சாக வரவேற்பு

Share this :
No comments


இந்திய பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு, தமிழ்நாடு இல்லத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக வெற்றி பெற்று, ஜெயலலிதா 6வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில், தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள், நிதி ஒதுக்கிடு பற்றி ஆலோசிக்க அவர் இன்று காலை 11 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

இன்று மதியம் டெல்லி சென்ற அவருக்கு விமான நிலையத்தில் மேள தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் அவரை வரவேற்றனர். அங்கிருந்து அவர் தமிழ்நாடு இல்லம் சென்றார்.

அங்கு அவருக்கு மலர்கொத்து அளித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் காவலர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். மேலும், பூரண கும்ப மரியாதையும அவருக்கு அளிக்கப்பட்டது.

No comments :

Post a Comment