மறுபடியும் ஜெயலலிதாவிடமே போயிடலாம்: தூது அனுப்ப விஜயகாந்த் பிளான்?

Share this :
No comments


நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. திமுகவும் ஓரளவு மீண்டு வலிமையான எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது. இரு கட்சிகளின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்த தேமுதிக தேர்தல் முடிவில் அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டது.

தேர்தல் நேரத்தில் அதிமுகவையும், முதலமைச்சர் ஜெயலலிதாவையும் விமர்சித்து எக்கச்சக்க வழக்குகள் பாய்ந்துள்ளது விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா மீது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது 36 வழக்குகளும், பிரேமலதா மீது 13 வழக்குகளும் உள்ளன.

இந்த வழக்குகளை சந்திக்க தேமுதிகவுக்கு கடினமாக இருப்பதால் ஆளும் கட்சியுடன் சமாதானமாக போகும் முடிவில் விஜயகாந்த் இருப்பதாக தேமுதிக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மேலும் உள்ளாட்சி தேர்தல் வருவதால், தங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள வாபஸ் பெற்றால், உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை ஆதரிக்கவும் தயாராக இருப்பதாக தேமுதிகவில் பேசப்படுகிறது. இந்த அதிமுக, தேமுதிக உறவை மீண்டும் புதுப்பிக்க தேமுதிகவில் இருந்து அதிமுகவிற்கு சென்ற முன்னாள் அமைச்சரை தேமுதிக அனுக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

No comments :

Post a Comment