ஜெயலலிதாவுக்கு அம்மா என்ற பட்டம் கொடுத்தது யார்?: அதிமுகவை பொளந்துகட்டும் விஜயகாந்த்
தேமுதிக-மக்கள் நல கூட்டணி-தமாகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான விஜயகாந்த் தேவக்கோட்டையில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதிமுக இரட்டை சின்னத்தில் போட்டியிடாமல் சேவல் சின்னத்தில் போட்டியிட தயாரா என கேள்வியெழுப்பினார்.
தேவக்கோட்டையில் பேசிய விஜயகாந்த் அதிமுக இரட்டை இலை சின்னம் எம்ஜிஆர் படம் இல்லாமல் சேவல் சின்னத்தில் தேர்தலில் நிக்க முடியுமா என கூறினார்.
அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு என பெயர் வைக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு எம்ஜிஆர் பெயரை ஜெயலலிதா வைப்பாரா. அம்மா என்ற பட்டம் யார் கொடுத்தது, நீங்களாக வைத்துக்கொண்டது என பேசினார் விஜயகாந்த்.
மேலும் பேசிய விஜயகாந்த், புரட்சித் தலைவர் குடிநீர் திட்டம்ன்னு வைக்கிறீங்களா?, புரட்சித் தலைவர் உணவகம்ன்னு வைக்கிறீங்களா இல்லல. அப்ப நான் என்ன கேட்கிறேன், உங்களுடைய சின்னமான சேவல் சின்னத்தில் போட்டியிடுங்க.
இரட்டை இலை சின்னம் மற்றும் எம்ஜிஆர் படத்தை தூக்கிடுங்க. நீங்க சேவல் சின்னத்தில் நில்லுங்க பார்ப்போம். சேவல் சின்னத்தில் நின்னா தோத்துடுவோம்ன்னு பயமா? தேர்தல் நேரத்தில் மட்டும் எம்ஜிஆர் படத்தை ஏன் ஒட்டனும் என்றார் விஜயகாந்த்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment