நான்கு நாட்கள் டாஸ்மாக் கிடையாது : குடிமகன்கள் அதிர்ச்சி
வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி நான்கு நாட்களுக்கு டாஸ்மாக்கை மூடச்சொல்லி உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு.
சட்டசபை தேர்தல் வருகிற 16ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனையொட்டி மே 14, 15 மற்றும் வாக்குப்பதிவு நடக்கிற 16ஆம் தேதிகளிலும், அடுத்து ஓட்டு எண்ணிக்கை நடக்கிற 19ஆம் தேதியும் சேர்த்து, மொத்தம் நான்கு நான்களுக்கு டாஸ்மாக்கை மூடச்சொல்லி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
தேர்தல் நேரம் என்பதால், குடிமகன்கள் குடித்து விட்டு மக்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது என்பதற்காகவும், அதனால் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிர்க்கவும் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
Labels:
News
,
other