கரூர் அதிமுக பிரமுகர் அன்புநாதன் வீட்டில் அதிமுக அமைச்சர்கள்?

Share this :
No comments


கரூர் அதிமுக பிரமுகர் அன்புநாதன் வீட்டில் இரண்டு அதிமுக அமைச்சர்கள் வந்து சென்றது தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அவரது வீடு மற்றும் குடோன்களில் ரூ 5 கோடி பணம் பதுக்கிவைக்கப்பட்டு இருந்ததாக கூறப்பகிறது. இந்த தகவல் அறிந்த தேர்தல் பறக்கும் படையினர் அவரது வீட்டில் சோதனை நடத்தி ரூ 5யை கோடியை பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில், கரூர் அன்புநாதன் வீட்டில் பல கோடி பதுக்கப்பட்டுள்ளதாவும், அந்த பணத்தை பிரித்து பல தொகுதிகளுக்கு அனுப்பியதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், பணம் பதுக்கிய இடத்தில் சிசிடிவி கேமிரா பொருத்தி கண்காணிக்கப்பட்டது. பணம் பிரித்து அனுப்பப்படும் காட்சிகள் அந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.

மேலும், அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் இருவர் அன்புநாதன் வீட்டுக்கு வந்து சென்றதும் அந்த கேமிராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment