திமுக ஆட்சியின் முதல் கையெழுத்தில் டாஸ்மாக்கை மூடுவோம் : மு.க.ஸ்டாலின் அதிரடி
திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின் தற்போது தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். கன்னியாகுமர் மாவட்டத்தில் உள்ள விளவங்கோடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாலர் எஸ்.விஜயதரணி, கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எஸ். ராஜேஷ்குமார் ஆகியோரை ஆதரித்து பேசினார்.
அவர் கூறும்போது “நமக்கு நாமே பயணத்தை கன்னியாகுமாரி மாவட்டத்தில் தொடங்கி 234 தொகுதிகளுக்கும் சென்றேன். பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சனைகளை பற்றி பேசினேன். ஆனால், அதிமுகவினர் மக்களை சந்திக்க முடியாத நிலையில் இருக்கின்றனர். சில இடங்களில் மக்களே அவர்களை விரட்டி அடிக்கும் நிலை உள்ளது.
1974ஆம் ஆண்டு திமுக ஆட்சி நடைபெற்ற போது மதுக்கடைகளை மூடினோம். 2008ல் விற்பனை நேரத்தில் ஒரு மணி நேரம் குறைத்தோம். அப்போது மது மூலம் அரசுக்கு ரூ.3 ஆயிரம் கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. ஆனால், ஜெயலலிதா மது விற்பனையை ரூ.30 ஆயிரம் கோடியாக உயர்த்தி விட்டார்.
நாங்கள் ஆட்சி அமைத்தால், முதல் கையெழுத்திலேயே டாஸ்மாக்கை மூடுவோம். அடுத்த கையெழுத்தில் லோக் ஆயுக்த கொண்டுவருவோம். மேலும் மாணவர்களின் கல்விக் கடன், விவசாயக் கடன் ஆகியவற்றை ரத்து செய்வோம்.
அதிமுக ஆட்சியில் புதிய தொழிற்சாலைகளும் தொடங்கப்படவில்லை. ஒரு யூனிட் மின்சாரம் கூற உற்பத்தி செய்யப்படவில்லை” என்று பேசினார்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment