குழந்தைகளுக்கு விருப்பமான டோக்ளா

Share this :
No comments

டோக்ளா வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கடலைமாவு - 2 கப்

புளிப்பு தயிர் - 1 1/2 கப்

மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்

இஞ்சித்துண்டுகள் - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

கொத்தமல்லி - சிறிதளவு

கடுகு - 1/2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்

தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன்

சோடா உப்பு (அ) லெமன் சால்ட் - 1 சிட்டிகை

எண்ணெய் - 3 டீஸ்பூன்

சீரகம் - அரை ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடலைமாவை புளிப்புத் தயிரில் கட்டியில்லாது கரைத்துக் கொள்ளவும்.

* இத்துடன் உப்பு, மிளகாய்த்தூள், சோடா உப்பு சேர்த்துக் நன்றாக கலக்கவும்.

* எண்ணெய் தடவிய தட்டில் இந்த கலவையை விட்டு ஆவியில் 15 நிமிடம் வேக வைத்து ஆறியதும் எடுத்து துண்டுகள் போடவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயதூள், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு தாளித்து அதை கடலை மாவு கலவை துண்டுகளில் மேல் போடவும்.

* பிறகு அதன் மேல் தேங்காய்த்துருவல், கொத்தமல்லி போட்டு கலக்கினால் டோக்ளா தயார்.

குறிப்பு:

இதற்கு ஸ்வீட் சட்னி, கார சட்னி தொட்டு சாப்பிடலாம்.

No comments :

Post a Comment