நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா? எச்சரிக்கை தருகிறது Sleepman

Share this :
No comments


இன்றைய காலத்தில் ஏராளமானோர் சரியான நேரத்திற்கு எழுந்திருக்க வேண்டும் என்பதற்காக அலாரத்தினை தயார் செய்துவிட்டு படுக்க சென்றுவிடுகிறார்கள்.

காலையில் குறித்த நேரத்திற்கு அலாரம் உங்களை எழுப்பிவிடுகையில், நீங்கள் சரியாக தூங்கினீர்களோ இல்லையோ, அதனை கவனிக்காமல் வேகமாக எழுந்துகொண்டு கடமைகளை முடித்துக்கொண்டு வேலைக்கு சென்றுவிடுகிறீர்கள்.

இதனால், நீங்கள் சரியான முறையில் தூங்கினீர்களா என்பது கூட உங்களுக்கு தெரியாது, இவற்றையெல்லாம் கவனிப்பதற்காகவும், நீங்கள் செய்யும் பணியில் கவனம் செலுத்துவதற்காகவும் Sleepman சாதனம் அறிமுகமாகியுள்ளது.
இது புதுவிதமான, பல்வேறு செயல்பாடுகள் கொண்ட கண்காணிப்பு சாதனம் ஆகும், அதாவது நீங்கள் இதனை உங்கள் கையில் அணிந்துகொண்டு, காலை 6.00 மணி என அலாரத்தினை செட் செய்துவிட்டால், நீங்கள் ஆரோக்கியமான முறையில் தூங்கினீர்களா என்பதை சோதனை செய்து 10 நிமிடத்திற்கு முன்பாக உங்களை எழுப்பிவிடும்.

அதுமட்டுமின்றி, இரவு நேர பயணத்தின்போது நீங்கள் தூங்கிகொண்டே வாகனம் ஓட்டுவீர்கள், அப்போது இதனை நீங்கள் அணிந்துகொண்டால், எந்த நேரத்தில் நீங்கள் சோம்பேறித்தனமாக இருக்கிறீர்களோ, அந்த இடத்தில் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்கும்.

அதனைப்பார்த்து நீங்கள் வாகன ஓட்டுதலில் கவனம் செலுத்தலாம், மேலும் பணி நேரத்தில் நீங்கள் அழுத்தமாக காணப்பட்டு, கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டால் இதனை கையில் அணிந்துகொண்டு சற்றுநேரம் கண் அயருங்கள்.

குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு நீங்கள் கண் அயர்ந்த நேரம் போதுமானது, எழுந்திருக்கலாம் என உங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும்.

அதன் பிறகு புத்துணர்ச்சியுடன் நீங்கள் பணியாற்றலாம்.

No comments :

Post a Comment