முன்னாள் காதலி கத்ரீனாகைப்புடன் இனி நடிக்கமாட்டேன்: ரன்பிர் கபூர்

Share this :
No comments

முன்னாள் காதலி கத்ரீனாகைப்புடன் இனி சேர்ந்து நடிக்கமாட்டேன் என்று ரன்பிர் கபூர் தெரிவித்துள்ளார்.

இந்தி திரை உலகில் முன்னணி நடிகர் - நடிகைகள் வருடக்கணக்கில் காதலிப்பதும், ஒன்றாக சுற்றித் திரிவதும், ஒரே வீட்டில் குடியிருப்பதும் பின்னர் பிரிந்து விடுவதும் சாதாரண விஷயம்.

இப்படி பிரிந்தவர்கள் பட்டியலில் ரன்பிர் கபூர்-கத்ரீனாகைப் ஜோடி சமீபத்தில் சேர்ந்தது. 6 வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் காதல் கசந்து போனது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

என்றாலும், ஒரு படத்தில் காதலர்களாக நடிக்க வேண்டியது இருக்கிறது. இவர்கள் காதலித்துக் கொண்டிருந்தபோது ‘ஜக்கஜசூஸ்’ என்ற படத்தில் நடித்தனர்.

இந்த படத்தை முடித்துக் கொடுப்பதற்காக மீண்டும் ரன்பீர்கபூர்-கத்ரீனாகைப் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். அனுராக்பாசு இயக்கிவரும் இந்த படத்தை ரன்பீர்கபூரும் சேர்ந்து தயாரிக்கிறார்.

இவர்கள் இருவரும் நடிக்கும் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. அப்போது இருவரும் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டனர். இது இந்த படத்தின் இயக்குநருக்கு சங்கடத்தை கொடுத்திருக்கிறது. படம் எதிர்பார்த்தபடி வருமா என்ற கலக்கத்தில் அவர் இருக்கிறார்.

இந்த நிலையில், கத்ரீனாகைப் மீது கடும் கோபத்தில் இருக்கும் ரன்பீர், இயக்குனர் அனுராக்பாசுவிடம், ‘‘முடிந்தால் இந்த படத்தில் வரும் காதல் காட்சிகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

இதுதான் நான் கத்ரீனாகைப்புடன் நடிக்கும் கடைசிபடம். இனி அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன்’’ என்று தெரிவித்து இருக்கிறார்.

No comments :

Post a Comment