நடிகை விஜயசாந்தி வீட்டில் நகை திருட்டு: பணிப்பெண் கைது- நகைகள் மீட்பு
ஹைதராபாத்: பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான விஜயசாந்தி வீட்டில் தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸ் விசாரணையில் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் நகைகளை திருடியது தெரியவந்ததையடுத்து அந்த பெண்ணிடம் இருந்து திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் கடந்த 1980 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் விஜயசாந்தி. இவர் தமிழில் ரஜினிகாந்த் நடித்த 'மன்னன்', கமல்ஹாசன் நடித்த 'இந்திரன் சந்திரன்' உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
வைஜெயந்தி ஐபிஎஸ் தொடங்கி சினிமாவில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இவர் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் என்ற பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அரசியல் பணி காரணமாக அடிக்கடி வெளியூருக்கு செல்லும் விஜயசாந்தி சமீபத்தில் வெளியூர் சென்றிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் அவரது வீட்டின் உள்ளே புகுந்து அங்கிருந்த விலை உயர்ந்த வைர மோதிரம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டதாக தெரிகிறது.
கொள்ளை போன நகைகளின் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும் என கூறப்பட்ட நிலையில், இது குறித்து விஜயசாந்தியின் சகோதரர் பஞ்சாரா ஹில்ஸ் போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணே நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணிடம் இருந்து திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டன.
Labels:
cinema news
No comments :
Post a Comment