இந்த உணவுகள் எல்லாம் உடல் எடையை அதிகரிக்க செய்யும் என உங்களுக்கு தெரியுமா?

Share this :
No comments

சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் உடல் எடை கூடாது. வயிறு முட்ட சாப்பிட்டாலும் உடல் மெலிந்தே இருக்கும்.

இதில் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், வயிறு முட்ட சாப்பிட்டால் உடனே உடல் எடை கூடும் என நினைப்பது தவறு. என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியம்.சத்தில்லாத சாப்பாட்டினை எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை கூடாமல் இருக்கும்.

சரி நன்றாக ஆரோக்கியமான சாப்பாடு சாப்பிட்டும் உடல் எடை கூடவில்லையா? அப்படியென்றால் நீங்கள் கவனம் கொள்வது எந்த வகையான காய்கள் மற்றும் உணவுகள் உடல் எடையைக் கூட்டும் என தெரிந்து கொண்டு அவற்றை சாப்பிடுங்கள்.

எளிதில் பூசியது போல் ஆகிவிடுவீர்கள். அவ்வகையில் இந்த குறிப்புகள் உடல் எடைஅயை கூட்டும் வகையிலேயே தரப்படுகின்றது. படித்து அறிந்து கொள்ளுங்கள்.

பிரெட் வகைகள் : முழுதானிய வகைகள் கொண்ட பிரெட் இப்போது கடைகளில் கிடைக்கிறது, அவற்றை தினமும் வெண்ணெய் தடவி உண்டால் 15 நாட்களுக்குள் உடல் பூசியது போல் மெருகேறும்.

பிரட்டில் காய்கள் சேர்த்து வெண்ணெய் மற்றும் சீஸ் கலந்து சாண்ட்விச் போல சாப்பிட்டாலும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். உடல் எடையையும் கூட்டும்.

எள்ளு : எள்ளு உடல் மெலிந்தவர்கள் உண்டால் , வாளிப்பான உடல் கிடைக்கும். எள்ளு மிட்டாய், எள்ளுப் பொடி, எள்ளுச் சட்னி ஆகியவற்றை செய்து சாப்பிடலாம். எள்ளு, சூடு என்பதால் சாதத்தில் சிறிது நெய் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.

பால் மற்றும் தயிர் : பாலில் 30 கிராம் புரோட்டின் மற்றும் கால்சியம் கொழுப்பு அடங்கி உள்ளது. தினமும் நீர் கலக்காத பாலை குடித்து வந்தால் உடல் பருமனாகும். ஓரளவு பருமனாக வேண்டும் என்று நினைப்பவர்கள் பசும் பாலை குடிகலாம்.

இதில் கொழுப்பு இல்லை. நீங்கள் மிகவும் ஒல்லியாக நோஞ்சான் உடம்பு கொண்டிருந்தால், உங்களுக்கு எருமைப் பால் கிடைக்குமென்றால், அதனை பருகுவது சிறந்தது. மிக கொழுப்பு கொண்டுள்ளது. அதனை குடித்தால் எளிதில் உடல் பருமனாகிவிடும்.

ஆனால் ஒரு கிளாஸ் குடித்தால் போதுமானது. அதற்கு மேல் குடித்தால் மந்தத் தன்மை வரும். எருமைப் பாலில் கெட்டித் தயிர் சாப்பிட்டு வந்தாலும் உடல் பருமனாவது கியாரெண்டி.

சோயா மில்க் : சோயா மில்க் தினமும் குடித்து வந்தாலும் உடல் எடை கூடும். இதில் அதிக அளவு புரோட்டின் உள்ளது. தேவையான எல்லா ஊட்டச் சத்தையும் சோயா மில்க்கில் பெறலாம்.

யோகார்ட் : யோகார்ட் உடல் எடையை அதிகரிக்க சிறந்த உணவு வகை. தினமும் ஒரு கப் யோகார்ட் சாப்பிடுங்கள். அதில் கால்சியமும் உள்ளது. ஜீரணத் தன்மையை அதிகரிக்கும்.

ஆலிவ் எண்ணெய் : ஆலிவ் எண்ணெயை சமையலுக்கு உபயோகப்படுத்துங்கள். இது உடல் பருமனை கூட்டும். இது இதயத்திற்கும் நல்லதை செய்யும். அது போலவே க்டலை எண்ணெய். சுத்தமான கடலை எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துங்கள். உடல் எடை கூடும்

அவகேடோ : அவகேடோவில் 140 கலோரி உள்ளது. விட்டமின், பொட்டாசியம், ஃபோலிக் அமிலம் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்களும் கொண்டுள்ளது. அவகாடோஅவை தினமும் சாப்பிட்டு வாருங்கள். பலன் கிடைக்கும்.

நட்ஸ் : முந்திரி, பாதாம் ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். முந்திரி பாதாமை அரைத்து, அவற்றை பாலில் கலந்து குடித்தால் உடல் பருமனாகும்.

காய்கறிகள் : பூசணிக்காய், சுரைக்காய் ஆகியவை உடலுக்கு போஷாக்கினை தந்து எடையை கூட்ட உதவும் காய்கள். அவித்த உருளைக் கிழங்கு, முருங்கைக் காய் ஆகியவையும் உடல் எடையை அதிகரிக்க செய்யும்.

உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று கண்ட எண்ணெயில் செய்த சிப்ஸ் வகைகளோ, கொழுப்பு நிறைந்த உணவுகளே சாப்பிடாதீர்கள். இவை ஆரோக்கியத்திற்கு பதிலாக தீமையையே தரும். இதயத்தில் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகப்படுத்திவிடும்.

ஆகவே உணவோடு உஅண்வாக நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு உடல் எடையை அதிகரிக்கச் செய்யுங்கள். நேரத்திற்கு சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த ஒழுங்கு முறை உடல் எடையை சரியாக பராமரிக்க உதவும்.

No comments :

Post a Comment