காஃபி குடிக்கப் போகிறீர்களா? கொஞ்சம் ஜாக்கிரதை
காஃபி குடிக்க யாருக்குதான் பிடிக்காது. அதன் நிறமும் மணமும் எல்லாரையும் மயக்கும் குணமும் கொண்ட சுவை எல்லாரையும் கட்டிப்போட வைக்கும். நிற்க.. காஃபி நீங்கள் குடிக்கலாம். ஆனால் அதற்கு வரைமுறை உள்ளதாம். விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வாங்க அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
காஃபியில் காஃபின் என்கின்ற பொருள் உள்ளது. அது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அதனை 4 மற்றும் 5 முறை குடிக்கும் பெண்களுக்கு என்டோமெட்ரியோஸிஸ் தாக்கும் அபாயம் உள்ளது என கூறுகின்றனர்.
எண்டோமெட்ரியோசிஸ் என்றால் என்ன? பொதுவாக கருப்பைக்கு உள்ளே வளரும் திசுக்கள், கருப்பைக்கு வெளியே வளர்ந்தால் அந்த நோய்க்கு எண்டோமெட்ரியோஸிஸ் என்று பெயர். ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் பெண்களுக்கு சுரக்கும். இதுவே பூப்படைவதற்கும், தாய்மையடைவதற்கு காரணம்.
இந்த ஈஸ்ட்ரோஜன் அளவுக்குஅதிகமாக சுரந்தால், எண்டோமெட்ரியோசிஸ் வரும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சரி அதற்கு காபி குடிப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கேக்கறீர்களா? இன்னும் விரிவாக படியுங்கள்.
கஃபைன் ஈஸ்ட்ரோஜன் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் : ஒரே ஒரு கப் காஃபி குடிக்கும் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு, காஃபியே குடிக்காதவர்களை விட மிக அதிகமாக உள்ளது என ஆராய்ச்சியாளர் ஆய்வின் முடிவில் கூறியிருக்கின்றனர். அப்படியெனில் தினமும் 4, 5 முறை காஃபி குடிப்பவர்கள்க்கு 70 % அதிகமாக ஈஸ்ட்ரோஜன் சுரக்கும் .
நமது உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மூன்று வகையாக பிரிக்கலாம். அவை ஈஸ்ட்ரான், ஈஸ்ட்ரையால் மற்றும் ஈஸ்ட்ரேடியால். இதில் மூன்றாவதாக சொல்லப்பட்ட, ஈஸ்ட்ரேடியால் எண்டோமெட்ரியோசிஸ் திசுக்கள் வர காரணமாகிறது.
மேலும் இது சில வகை புற்று நோயை உருவாவதற்கும் காரணமாகிறது. காஃபின் , இந்த வகை ஈஸ்ட்ரேடியாலை அதிகரிக்க தூண்டுகிறது. இது கல்லீரலின் செயலையும் பாதிக்கிறது. மேலும் அட்ரினல் சுரப்பியின் செயல்களை தடுக்கிறது.
அதுமட்டுமில்லாமல், நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி, வயிறு உப்புசம் என பல்வேறு பிரச்சனைகளை கொண்டு தருகிறது. ஒரு முறை காஃபி குடிக்கலாம் தப்பில்லை அல்லது குடிக்காமலே இருக்கலாம் மிக நல்லது.
Labels:
health
No comments :
Post a Comment