ஹாலிவுட் படத்தில் ரஜினிகாந்துடன் இணைகிறார் ஜாக்கிசான்?
சென்னை: ஹாலிவுட் படம் ஒன்றில் ரஜினிகாந்த் - ஜாக்கிசான் இணைந்து நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கபாலி படத்துக்காக மலேசியாவில் ரஜினி தங்கியிருந்தபோது இந்தப் படத்துக்கான பேச்சுவார்த்தை நடந்ததாகத் தெரிகிறது.
ஆசிய சினிமாவில் மிகப் பெரிய நடிகர்கள் ரஜினிகாந்தும், ஜாக்கி சானும். இருவரும் சர்வதேச அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ளனர். ஹாலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஜாக்கி சான். இன்று கபாலி மூலம் ரஜினியை ஹாலிவுட் சினிமா வியந்து பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.
மலேசிய தயாரிப்பாளர் இருவரையும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வைத்தால் அந்தப் படம் சர்வதேச அளவில் பெரிய வெற்றிப் படமாக அமையும் என யோசித்த மலேஷிய தயாரிப்பாளர் ரபிஜி முகமத் ஜின் என்பவர் அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
ரஜினியிடம் பேச்சு இந்தப் படம் குறித்து ஏற்கெனவே ரஜினி மலேசியாவில் கபாலி படத்துக்காக தங்கியிருந்தபோது பேசிவிட்டதாகத் தெரிகிறது. ரஜினியும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
ஜாக்கியும் ஓகே ஜாக்கி சானிடமும் இந்தப் படத்தில் நடிப்பதற்கான அனுமதியைப் பெற்றுவிட்டதாகத் தெரிகிறது. எல்லாம் சரியாக அமைந்தால் இந்தப் படம் மலேசியா, தாய்லாந்து, சீனா மற்றும் ஹாங்காங் போன்ற பகுதிகளில் படமாக்கப்படும் என்று தெரிகிறது.
தலைப்பு கூட ரெடி படத்துக்கு 'ஷினி சாஹா' என்று தலைப்பு கூட வைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு ட்ராகனைச் சுற்றி நிகழும் கதை.
முழுக்க பேன்டஸி படம் எனத் தெரிகிறது. படம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. அநேகமாக ரஜினி அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் வெளியாகும் என்கிறார்கள்.
Labels:
cinema news
No comments :
Post a Comment